அர்ச்சுனாவுக்கு தெரிந்த இரகசியம்! உயிரைக் காக்க அரசாங்கத்திடம் கோரும் வாய்ப்பு
சுங்க சோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய 323 கொள்கலன்களின் உள்ளடக்கங்களை தன்னால் வெளியிட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கொள்கலன்கள் எங்கிருந்து வந்தன, எந்த நாட்டிலிருந்து வந்தன என்பதை முழுமையாக கூறமுடியம் என்றும் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இதனை வெளியிடவேண்டும் என்றால், அரசாங்கம் பொய்யான குற்றச்சாட்டுகளில் தன்னை சிறையில் அடைக்காது என்ற உத்தரவாதம் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அர்ச்சுனா இராமநாதன்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களின் என்ன இருந்தது என்பதற்கான பட்டியலை வழங்க முடியும்.
அது எங்கிருந்து வந்தது, எந்த நாட்டிலிருந்து வந்தது என்பதை முழுமையாக கூறமுடியம்.
ஆனால், என்னை நாடாளுமன்றத்திலிருந்து நீக்கி, நாளை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க மாட்டீர்கள் என்பதை உறுதியளித்தால் மாத்திரமே நான் அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.
323 கொள்கலன்களில் என்ன இருந்தது
இல்லையெனில் நான் வேறு நாட்டிற்கு சென்றே அதை வெளியிட வேண்டும்.
அந்த 323 கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை நான் பயமின்றி உங்களுக்குச் சொல்வேன். முழு விவரங்களையும் நான் உங்களுக்குச் சொல்ல முடியும்.
ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. ஆனால் நான் மரணத்திற்கு ஒருபோதும் பயப்படவில்லை.
இப்போது அரசாங்கத்திடம் பொலிஸ் அதிகாரம் உள்ளது. இப்போது அவர்கள் உண்மை வெளிவருவதைத் தடுக்கவும், உறுப்பினர் பதவியை இரத்து செய்வதன் மூலம் ஒருவரின் வாயை மூடவும் முயற்சிக்கிறார்கள்” என்றார்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
