அமைச்சர் சந்திரசேகருக்கு நாடாளுமன்றில் வைத்து தமிழ் கற்பித்த அர்ச்சுனா எம்.பி!
அமைச்சர் சந்திரசேகர் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இருந்த தமிழ் உச்சரிப்பு பிழைகளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மிகவும் நக்கலான தொனியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய அமர்வின் போது அமைச்சர் சந்திரசேகர், வட்டுவாகல் பாலம் உள்ளிட்ட பாலங்களை புனரமைப்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அமைச்சர் சந்திரசேகரின் உரைகளில் இருந்த தமிழ் பிழைகளை கிண்டல் செய்வது போன்று கருத்துக்களை வெளியிட்டார்.
“வழமையாகவே தான் இந்த நாடாளுமன்றத்தில் எழுந்து பேசும் போது மிகவும் கோபமாக கதைப்பதாகவும், எனினும், இன்றையதினம் தன்னால் கோபப்பட முடியாத அளவுக்கு அமைச்சர் சந்திரசேகரின் உரை இருந்ததாகவும்” அர்ச்சுனா எம்.பி இதன்போது குறிப்பிட்டார்.
“இரண்டு சொற்களுக்கான எழுத்துக்களுக்கு வித்தியாசம் தெரியாத அமைச்சர், மீண்டும் தனது சித்து விளையாட்டுக்களை ஆரம்பித்துவிட்டாரோ என்று தான் பயந்து போனதாகவும்” அர்ச்சுனா எம்.பி சுட்டிக்காட்டினார்.
மேலும், தமிழரசுக் கட்சி தொடர்பில் அமைச்சர் கடந்த காலங்களில் வெளியிட்ட கருத்துக்களுக்கும் இதன்போது அர்ச்சுனா எம்.பி தனது கண்டனங்களை வெளியிட்டார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
