இரணைமடு குள நீரை ஏன் யாழ் மக்களுக்கு வழங்கமுடியாது: அர்ச்சுனா பகிரங்க கேள்வி!
இரணைமடு குளத்தில் இருந்து விவசாயத்திற்கு பயன்படும் நீருக்கு மேலதிகமாக வெளியேற்றப்படும் நீர் கொள்வனவினை யாழ். குடிநீர் திட்டத்திற்கு பயன்படுத்துவது தொடர்பிலான கோரிக்கை ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் (Ramanathan Archchuna) முன்வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அர்ச்சுனா,
இரணைமடு குள நீர்
கிளிநொச்சி இரணைமடு குளத்தில் 37 கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். ஆனால் தற்போது 27 கன அடி நீரே நிரப்பப்பட்டுள்ளது.
இதுவைரைகாலமும், யாழ் மாவட்டத்தில்கு மேலதிகமாக வெளியேறும் நீரினை ஏன் கொண்டு செல்வதற்கான சரியான திட்டம் வகுக்கப்படவில்லை?
இதனை சரியான அளவில் பயன்படுத்துவதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு தேவையான நீரினை வழங்க முடியும். இதில் அதிக அரசியல் பின்புலங்கள் காணப்படுகிறது.
கிளிநொச்சியில் விவசாயம் செய்யாமல் யாழில் உள்ளவர்கள் உணவருந்த முடியாது. அதேபோல யாழில் குடிநீர் வசதி இல்லை என்ற காரணத்தினால் கிளிநொச்சியில் வந்து மக்கள் குடிபெயர முடியாது.
அமைச்சருக்கு வேண்டுகோள்
இதன்போது அமைச்சருக்கு வேண்டுகோளொன்றை முன்வைக்கின்றேன்.
இந்த நீர் விநியோக திட்டத்தில் எவ்வித அரசியல் இலாபத்தையும் எதிர்பார்க்காமல் மக்களின் நலனுக்காக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 6 மணி நேரம் முன்

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
