மீண்டும் சபையில் கத்தி கூச்சலிட ஆரம்பித்துள்ள அர்ச்சுனா எம்.பி! நாடாளுமன்றில் கடும் குழப்பநிலை
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உரையாற்றும் போது, அர்ச்சுனா இராமநாதன் எம்.பி ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்ற சந்தர்ப்பம் கேட்டபோது அது மறுக்கப்பட்டதாகவும், அர்ச்சுனா நாடாளுமன்றத்திற்குள் உள்ளே நடைபெற்ற விடயம் தொடர்பிலேயே பேச முற்பட்டதாகவும், அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டமை தவறானது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்பின்னரே சபையில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு
அர்ச்சுனா எம்.பி எழுந்து, விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான தகவலை சுட்டிக்காட்டி கடுமையாக கூச்சலிட்ட நிலையில், பின்னர் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க எழுந்து விளக்கம் அளித்துள்ளார்.
எனினும், தொடர்ந்து அர்ச்சுனா இராமநாதன் எம்.பி கடும் கூச்சலிட்டு வருவதால் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.