சர்வதேசத்தை ஏமாற்றும் அரசு! இலங்கை அரசாங்கத்தை சாடிய பேராயர்
பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் மேற்கொள்ளும் இந்த பயணத்தை நாம் நிராகரிக்கின்றோம். இவர்கள் உண்மையை மூடி மறைக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர். இவர்கள் போப் பாண்டவரையும் தவறாக வழிநடத்தவே இவர்கள் பார்க்கின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நாம் எதிர்பார்க்கும் நியாயத்தை வழங்காமல், அரசாங்கத்திற்கு சார்பான வகையில் தீர்மானங்களை மேற்கொண்டு உண்மையை மறைக்க பயன்படும் மற்றுமொரு துருப்புச் சீட்டே இந்த விடயம். இரண்டரை வருடங்களாக மக்கள் உண்மை வெளிப்படுத்தப்படும் என நம்பியிருந்தனர். எனினும் அது இடம்பெறவில்லை.
இவர்கள் இன்று சர்வதேசத்தை அனுகுவதால், எமது நிலைப்பாடு என்னவென்பதை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதை சர்வதேசத்திற்கு நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். நாம் சர்வதேசத்தை தவறாக வழிநடத்துவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அரசாங்கம் சர்வதேசத்தை நாடுமெனின், எமக்கு வேறு வழியில்லை. நாமும் அதனை நாடுவோம். ஜனாதிபதிக்கு அனைத்து விடயத்தையும் தெரிவித்து ஜுலை மாதத்தில் கடிதமொன்றை அனுப்பய போதிலும் பிரச்சினையை மூடிமறைக்கின்ற பதிலைத்தான் அவர் வழங்கினார்.
இதுத் தொடர்பில் வத்திகான் ஊடாக ஜெனீவாவில் எமது விடயத்தை முன்வைப்பதை விட வேறு வழியில்லை. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே எமக்கு வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ளார்.