தமிழர் பிரதேசங்களில் சர்வதேச ஆய்வாளர்களின் மேற்பார்வையில் தொல்பொருள் ஆய்வுகள் - சுப்பிரமணியம் சுரேன்
தமிழர் தாயக பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வுகளின் போது சர்வதேசஆய்வாளர்களையும், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் பீட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் இணைத்துக்கொள்வதுடன், ஐக்கிய நாடுகள் மரபுரிமை அமையத்தின் மேற்பார்வையும் வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபையின் மாதாந்த பொதுச்சபை அமர்வு இன்று சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இங்கு கூட்டத்தை ஆரம்பித்து தவிசாளர் தனது பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது,
தமிழர் தாயக பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வு செய்யும் போது எமது அடையாளங்கள் ஆய்வாளர்களாலேயே திட்டமிட்டு மாற்றப்படுவதாக மக்கள் அஞ்சுகின்றனர்.
இதற்கு உதாரணமாக அண்மையில் குருந்தூர் மலையில் அகழ்வின் போது மேலெழுந்த பல்லவர் கால தாராலிங்கத்தை கூட பௌத்த மத அடையாளமாக சித்தரிக்கின்றது.
தொல்பொருள் திணைக்களம் இதனால் மக்கள் திணைக்களம் மேல் நம்பிக்கை அற்று இருக்கின்றனர்.
எனவே மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டுமானால் ஒரு மேற்ப்பார்வையின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
இதனை ஏற்றுகொண்ட சபையினர் ஏகமானதாக குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri