குச்சவெளி பொலிஸ் நிலையத்தின் பெயர்பலகை விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
குச்சவெளி பொலிஸ் நிலையம் அமைந்திருந்த காணியில் தொல்பொருள் திணைக்கள பெயர்பலகை இடப்பட்டமை தொடர்பிலான பிரச்சினை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
நேற்று (15) நடைபெற்ற குச்சவெளி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கலந்து கொண்டோர்
இக்கூட்டமானது வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சரும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திர தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, நிறுவனம் ஒன்றுக்கு உப்பு உற்பத்திக்கு என வழங்கப்பட்ட காணிக்கு மேலதிகமாக அந்நிறுவனத்தால் காணிகள் பயன்படுத்துவதால் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய்தல், இறக்ககண்டியில் இறைச்சி அறுக்கப்பட்டு வீசும் கழிவுகளை முகாமைத்துவம் செய்தல் போன்றவற்றை இம்ரான் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கதிரவேலு சண்முகம் குகதாசன், ரொசான் அக்மீமன உட்பட பிரதேச செயலாளர், திணைக்கள பொறுப்பதிகாரிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |