கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் அடையாளம்!மக்கள் குற்றச்சாட்டு
கிளிநொச்சி, உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்திலும் தொல்லியல் அடையாளம் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி, உருத்திரபுர சிவன் ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகக் கூறி அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களத்தினர் அண்மையில் குறிப்பிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் அப்பகுதிக்கு பௌத்த தேரர் ஒருவர் நண்பகல் வேளையில் வருகை தந்ததாகவும், அவர் அங்கிருந்து சென்ற சில மணித்தியாலங்களின் பின்னர் அப்பகுதிக்கு பொலிஸார் வந்ததாகவும், அதன் பின்னர் மாலை வேளையில் இராணுவத்தினர் வருகை தந்து அவ்விடத்தை பார்த்து சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் பரபரப்பான நிலை காணப்படுகிறது. ஏற்கனவே தொல்லியல் திணைக்களத்தால் அப்பகுதி அடையாளம் காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
