அரகலய போராட்டமே விலையேற்றம், தட்டுப்பாட்டுக்குக் காரணம்! ரோஹித்த அபேகுணவர்த்தன
அரகலய போராட்டம் காரணமாகவே கட்டண உயர்வுகளும், பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு என்பனவும் ஏற்பட்டதாக ரோஹித அபேகுணவர்த்தன எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
மின்சார கட்டணம் அதிகரிப்பு, பெரிய வெங்காய விலை உயர்வு போன்ற விடயங்களும் அரகலய போராட்டம் காரணமாகவே நிகழ்ந்தது என்றும், நாட்டின் இன்றைய நிலைமைக்கு அரகலய போராட்டமே காரணம் என்றும் அவர் தொடர்ந்தும் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்று(14.05.2024) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி
மேலும், தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் இன்றைய பொருளாதார வீழ்ச்சி மற்றும் நெருக்கடிக்கு அரகலய போராட்டமே காரணமாகும்.
அதன் காரணமாகவே மின்சாரக் கட்டண அதிகரிப்பு ஏற்பட்டது. பெரிய வெங்காயம் போன்ற அத்தியாவசிப் பொருட்கள் தட்டுப்பாடு உண்டானது. விலையும் அதிகரித்தது.
அதே நேரம் அரகலய போராட்டத்தின் முன்னணியில் நின்றவர்கள் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
