நெருங்கிய சகாக்களை காட்டிக்கொடுத்த மகிந்த தரப்பு.. கைது செய்யப்பட்ட ராஜபக்சக்களின் விசுவாசி
2022ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அரகலய போராட்டத்தின் போது, ராஜபக்சக்களின் ஆதரவாளர்கள் பலர் கோட்டாபயவுக்காக கடுமையாக குரல் கொடுத்தனர்.
இந்த போராட்டத்தில் சிக்கி, பேசுபொருளாகிய ஒரு ராஜபக்ச விசுவாசி தான் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகம.
அவர், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார்.
மகிந்த கஹந்தகமவிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சில காலமாக போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில், மகிந்த கஹந்தகமவிற்கும் மொட்டுக் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தற்போது ராஜபக்ச தரப்பு தெரிவித்துள்ளது. தற்போது அரசியல் களத்தில் இவ்விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,