காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்! வெளியான தகவல்
நுகேகொட பகோடா வீதியில் உள்ள தனது சொந்த அலுவலகத்திற்குள், சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனநாயக்கவை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து வகையான சமூக ஊடகங்கள் மீதும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசித்து வரும் நேரத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மந்தகதியில் நடக்கும் பொலிஸ் விசாரணை
சேனநாயக்க கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை - களுபோவிலவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடந்த 14ஆம் திகதி இரவு 9 மணியளவில் முகமூடி அணிந்த இருவர் முச்சக்கர வண்டியில் வந்து சேனாநாயக்கவை தாக்கிவிட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வாகனத்தை பொலிஸார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தாக்குதலுக்கான காரணம் எதுவும் அறியப்படவில்லை. எனினும், இது சமூக ஊடகங்களில் அவரது செயல்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
