இலங்கையர்கள் உட்பட 27 புலம்பெயர்ந்தோர் ரோமானிய எல்லைப்படையினரால் கைது!
இலங்கையர்கள் உட்பட 27 புலம்பெயர்ந்தோர் ரோமானிய எல்லைக்காவல் பிரிவான, அராட் எல்லைக்காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ், எரித்திரியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 27 புலம்பெயர்ந்தோரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயற்சி
புடவைத்துணிகள் மற்றும் உலோகக் கம்பிகள் ஏற்றப்பட்ட இரண்டு கனரக வாகனங்களுக்குள் மறைந்திருந்து, சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து ஹங்கேரிக்குள் ஊடுருவ முயன்றபோதே இந்த 27பேரும் அராட் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

முதலாவது சம்பவத்தில் ரோமானியர் ஒருவரால் ஓட்டிச்செல்லப்பட்ட கனரக வாகனத்தில் மறைந்த பயணித்த 16 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
பொலிஸார் விசாரணை
மேலும், நொட்லொக் எல்லையில மற்றும் ஒரு ரோமானியர் ஓட்டிச் சென்ற உலோகக் கம்பிகள் ஏற்றப்பட்ட கனரக வாகனத்தில் இருந்து 11பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்த சட்டவிரோத பயணங்கள் குறித்து மேலும் பல தகவல்களை கண்டறிய அராட் எல்லைக் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri