மட்டக்களப்பு விமான நிலையத்தை விமான பயிற்சி நிறுவனமாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல்
மட்டக்களப்பு விமான நிலையத்தில் விமானப் பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை 2018 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு விமான நிலையத்தை உள்ளூர் விமான சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்த போதிலும், தரையிறங்கும் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் இல்லாததால் தற்போது விமான நிலையம் வருமானம் ஈட்டவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம்
மேற்கூறிய உண்மையை கருத்திற்கொண்டு விமான நிலைய இடம்வேறு உற்பத்தி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மட்டக்களப்பு விமான நிலையத்தில் விமானப் பயிற்சி அகாடமியை நிறுவுவதற்காக துறைமுகங்கள், கடற்படை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
