சீனக் கப்பல் வருவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி! முரண்பாடான செய்திகள் தொடர்பில் ரணிலின் தகவல்
இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு சீனக் கப்பல் வரும் விடயத்தை உள்ளகச் சக்திகளும், வெளியகச் சக்திகளும் சுயநல அரசியலுக்கும், தத்தமது பலங்களை நிரூபிப்பதற்கும் பயன்படுத்த முயல்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகாரம் சம்பந்தமான தீர்மானம்
ஒரு நாட்டின் வெளிவிவகாரம் சம்பந்தமாக அந்த நாட்டு அரசாங்கமே தீர்மானம் எடுக்கும். அதில் வெளிச்சக்திகள் தலையிட முடியாது. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக தீர்மானம் எடுக்கும்போது அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பினரும் இணைந்து முடிவெடுப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிரகாரம், சீனக் கப்பல் வருவதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியிருக்கின்றது. இந்த விடயத்தை உள்ளக சக்திகளும், வெளியகச் சக்திகளும் சுயநல அரசியலுக்கும், தத்தமது பலங்களை நிரூபிப்பதற்கும் பயன்படுத்த முயல்கின்றார்கள்.
எந்த நாட்டையும் பகைக்கவேண்டிய, மோதவேண்டிய நிலைமை இலங்கைக்குக் கிடையாது. வரலாறு காணாத பொருளாதார அடியால் விழுந்து கிடக்கின்றது இலங்கை. அதிலிருந்து மெல்ல மெல்ல இலங்கை இப்போதுதான் எழுகின்றது.
இலங்கைக்கு பெரும் சிக்கலாக மாறும் சீன கப்பல் விவகாரம்! ரணிலின் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை |
வெளிநாடுகளிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்தநிலையில், வெளிநாடுகளின் ஒத்துழைப்பையே கோரி நிற்கின்றோம். பகைமைகளை மறந்து ஒவ்வொரு நாடுகளும் இலங்கைக்கு உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
சீனக் கப்பல் விவகாரம் தொடர்பில் உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வெளியாகும் முரண்பாடான செய்திகள் எமக்கு மிகவும் மனவருத்தத்தைத் தருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
