இலங்கையில் பைசர் தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு விரைவில் ஒப்புதல்!
இலங்கையில் பைசர் கோவிட் தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசிகளின் விவரங்களை ஆராய்ந்தப்பின்னர் இந்த ஒப்புதல் வழங்கப்படும் என்று தடுப்பூசிகளை பரிசீலிக்கும் நிபுணர் குழுவின் உறுப்பினர் வைத்திய கலாநிதி ரஜீவ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எட்டு உறுப்பினர்களைக்கொண்ட இந்த நிபுணர்கள் குழு முன்னதாக அஸ்ட்ராசெனேக்கா மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளின் பயன்பாடுகளுக்கு ஒப்புதலை வழங்கியது.
இதற்கிடையில், அஸ்ட்ராசெனேக்கா தடுப்பூசியின் இரண்டாவது குப்பியைப் பெற்ற பின்னர் அதிலிருந்து முழு பாதுகாப்பை உறுதி செய்யமுடியும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி பத்ம குணரத்ன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தடுப்பூசியின் முதல் குப்பியின் மூலம் வைரஸ் எதிராக ஒருவித பாதுகாப்பு வழங்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
கிரீன்லாந்திற்கு படைகளை அனுப்பும் ஜேர்மனி, பிரான்ஸ் - ட்ரம்ப்பிற்கு அழுத்தம் அதிகரிப்பு News Lankasri
விஜய் ரசிகர்களை பற்றி சிவகார்த்திகேயன் பதில்! சுதா கொங்கரா பேச்சு சர்ச்சையான பின் விளக்கம் Cineulagam