ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் நியமனம்
ஆயிரத்து ஐம்பது குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது இன்று(04.10.2026) அலரி மாளிகையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது.
கடந்த மார்ச் மாதத்தில் 976 குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தற்போதைக்கு 1050 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நியமனம்
அதற்கு மேலதிகமான இன்னும் 39 பேருக்கு விரைவில் நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரசைகளுக்கு மிகச் சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்தின் ஒரு கட்டமாகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri