ஜனாதிபதி செயலணிக்கு தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் நியமனம்! - விசேட வர்த்தமானி வெளியானது
கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த மூன்று உறுப்பினர்களும் மூவினத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில அளவையாளர் ஆரியரத்ன திசாநாயக்க, ஓய்வுபெற்ற மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், விரிவுரையாளா் முபிசால் அபூபக்கா் ஆகியோர் இந்த ஜனாதிபதி செயலணியின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஜனாதிபதி செயலணி கடந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. செயலணியின் உறுப்பினர் கட்டமைப்பை விரிவாக்கும் நடவடிக்கைகளுக்கமைய இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, செயலணியின் உறுப்பினராக கடமையாற்றி வரும் நில அளவையாளா் நாயகம் எம்.எஸ்.பீ. தென்னக்கோன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan