தாமதமாகும் புதிய அமைச்சர்களின் நியமனம்
புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்படுவது மேலும் தாமதமாகும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாணய நிதியத்தின் ஒப்புதல் கிடைத்த பின் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவர்
சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள 290 கோடி அமெரிக்க டொலர் கடனுதவி, நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைத்த பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாணய நிதியத்தின் இந்த ஒப்புதல் கிடைத்த பின்னர், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
அமைச்சரவைக்கு நியமிக்க வேண்டிய புதிய அமைச்சர்கள் 12 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி இருந்தது.
எனினும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவது தொடர்ந்தும் தாமதமாகி வந்தது. வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.
12 அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது
அமைச்சரவையில் தற்போது 18 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய மேலும் 12 அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பின்னர் 12 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய தேசியக்கட்சியின் வஜிர அபேவர்தன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஜீவன் தொண்டமான், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவரும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இவர்களை தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீதமுள்ள அமைச்சு பதவிகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
