இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!
இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் 7ஆவது பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் பூஜித விதான நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனமானது, ரியர் அட்மிரல் பூஜித விதான அக்குரேகொடையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (28.10.2022) தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொடுத்தார்.
இக்கடிதத்தை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன கையளித்தார்.

புதிய நியமனம்
இதுவரை காலம் இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்த ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க அண்மையில் சேவையிலிருந்த ஓய்வு பெற்றுச் சென்றமையடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரையில் பிரதிப் பணிப்பாளர் நாயகமாக இருந்த ரியர் அட்மிரல் பூஜித விதான புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam