தேசபந்து தென்னகோனின் நியமனம் தொடர்பில் நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை(Deshabandu Tennakoon) நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிலைப்பாட்டை அறிய கால அவகாசம் வழங்குமாறு மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தென்னக்கோனின் பொலிஸ் மா அதிபர் பதவி ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே இலங்கையில் தற்போது பதில் பொலிஸ் மா அதிபர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
தென்னக்கோனின் பதவி
இந்தநிலையில், தென்னக்கோனின் பதவியை எதிர்த்து கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் கர்தினால் ரஞ்சித் உள்ளிட்ட 8 தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றபோது போதே, சட்டமா அதிபரின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நாடாளுமன்ற சபாநாயகர், அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள், தேசபந்து தென்னகோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அடுத்தகட்ட விசாரணையை 2025 பெப்ரவரி 24 மற்றும் 25ம் திகதிகளுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது .
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan