முல்லைத்தீவு வவுனிக்குளத்திற்கான புதிய நீர்ப்பாசனப் பொறியியலாளர் நியமனம்
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான வவுனிக்குளத்தின் நீர்ப்பாசனப் பொறியியலாளராக எந்திரி.ச.சர்வராஜா கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இவர் கடந்த காலங்களில் யாழ்ப்பாண நீர்ப்பாசன பொறியியலாளராக கடமையாற்றியுள்ளதுடன் வவுனியா பிராந்திய மற்றும் வடமாகாண பணிப்பாளர் அலுவலக நீர்ப்பாசன பொறியியலாளராக கடமை ஆற்றியுள்ளார்.
இடமாற்றம்
இந்நிலையில் வவுனிக்குளம் உட்பட பன்னிரெண்டு பாரிய மற்றும் நடுத்தர குளங்களை கொண்ட வவுனிக்குளம் பிரிவிற்கு இவரது வருகை பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை காலமும் வவுனிக்குளத்தின் நீர்ப்பாசன பொறியியலாளராக கடமையாற்றிய எந்திரி.கை.பிரகாஷ் கிளிநொச்சி கிழக்கு பிரிவிற்கு இடமாற்றலாகி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan