ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களின் பின்னர் 10 புதிய அமைச்சர்கள் நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து நாடு திரும்பியதன் பின்னர் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது பத்து அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பத்து அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவிகளை தமக்கு வழங்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

எழுத்து மூல கோரிக்கை
இந்த கோரிக்கைகள் எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியமிக்கப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சர்கள்
கொழும்பு, ரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்ட தலைவர்களின் பெயர்கள் இந்த அமைச்சர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வகிக்கும் அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக 18 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், 38 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.