ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்
ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதுடன் களுத்துறை மாவட்ட அமைப்பாளராக நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிராந்திய அமைப்பாளர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் நேற்று கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது.
இதன்போதே அவருக்கு இந்த இந்த நியமனக்கடிதத்தை ஜனாதிபதி கையளித்தார்.
நியமனக்கடிதம்
இதற்கு மேலதிகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பீ.ஹரிசன், டபிள்யூ. பி.ஏக்கநாயக்க ஆகியோரும் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு நியமனக்கடிதம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் காலி மாவட்ட அமைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம, அம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பீ.திஸ்ஸ குட்டி ஆரச்சி மற்றும் பீ.தேவக்க வீரசிங்க ஆகியோருக்கும் ஜனாதிபதியினால் நியமனக்கடிதம் கையளிக்கப்பட்டது.
அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் பிராந்திய அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம், கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன.கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, கொழும்பு மாவட்ட தலைவர் ரவி கருணாநாயக்க, முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் மற்றும் வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இதன்போது 295 அமைப்பாளர்களுக்கு நியமனக்கடிதம் கையளிக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri