சுகாதார அமைச்சின் முறைகேடுகளை ஆராய நியமிக்கப்பட்ட புதிய குழுக்கள்
நாட்டிற்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தல் உட்பட சுகாதார அமைச்சின் பல முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் மூன்று புதிய குழுக்களை நியமித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் சுகாதார செயலாளர் உட்பட சுமார் 30 சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாக்குமூலங்கள் பதிவு
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் இணைக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவினர், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல, போலியான ஆவணங்களைத் தயாரித்து போலியான மருந்தை தயாரித்த நிறுவனத்தில் பணிபுரிந்த பணியாளர்களிடமிருந்தும் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டிற்கு மருந்துகளை இறக்குமதி செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட செயல்முறை தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



