அஸ்வெசும நிவாரண திட்டத்துக்கு ஜனவரியில் மீண்டும் விண்ணப்பம் கோர அரசாங்கம் தீர்மானம்
அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு திட்டமாக வழங்கப்படும் அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டத்துக்காக ஜனவரி மாதத்தில் மீண்டும் விண்ணப்பம் கோருவதற்கு தீர்மானித்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் பிரதேசத்தில் திங்கட்கிழமை (25.12.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி்க்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீண்டும் விண்ணப்பம் கோரல்
அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டத்துக்காக ஜனவரி மாதத்தில் மீண்டும் விண்ணப்பம் கோருவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நிவாரண திட்டத்துக்கு முறையாக விண்ணப்பிக்க முடியாமல் போனவர்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது. அதன் பிரகாரம் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இதற்காக மீண்டும் விண்ணப்பம் கோர தீர்மானித்திருக்கிறோம்.
அஸ்வெசும நிவாரண திட்டத்தின் முதலாம் கட்டத்தை நாங்களம் செயற்படுத்தி இருந்தோம். இதன்போது தகுதியானவர்களை தெரிவு செய்வதில் சில நடைமுறை பிரச்சினைகளுக்கு நாங்கள் முகம்கொடுத்திருந்தோம்.
அரச அதிகாரிகள் சேர்ப்பு
அனுபவமுள்ள அரச அதிகாரிகளை எவ்வாறு இந்த வேலைத்திட்டத்துக்கு இணைத்துக்கொள்வது போன்ற விடயங்கள் அனைத்தையும் சிந்தித்தே ஜனவரியில் மீண்டும் அஸ்வெசும நிவாரண திட்டத்துக்கு விண்ணப்பம் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரண திட்டத்துக்கு தகுதி இருந்தும் விண்ணப்பிக்க முடியாமல் போன சிலரிடம் மீண்டும் விண்ணப்பம் கோர உள்ளோம்.
அதன்படி, தற்போதுள்ள 20 இலட்சம் என்ற வரையறையை 24 இலட்சம் வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |