சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (05) நவம்பர் 30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அறிவுறுத்தல்கள்
அனைத்து பாடசாலை விண்ணப்பதாரிகள் தங்கள் பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாகவும், தனியார் விண்ணப்பதாரிகள் தாமாகவே இணையத்தினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இதற்காக பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்களில் இது தொடர்பான அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படித்து அதற்கேற்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam