பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/26 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் திகதி வெளியான 2025 உயர்தரப் பெறுபேறுகளின்படி, 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
'A' சித்தியை பெற்ற மாணவர்கள்
இம்முறை பரீட்சைக்கு 281,810 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தியைப் பெற்ற பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 7,477 ஆகும், இது 3.38 சதவீதமாகும். மேலும், 823 தனியார் பரீட்சார்த்திகளும் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தியைப் பெற்றுள்ளனர்.
2025 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 30,000-க்கும் மேற்பட்டோர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.