ரணில் விக்ரமசிங்க தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக விண்ணப்பம்
முன்னாள் ஜனாதிபதியின் சார்பில் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புத் தலைவர் கேட்டதாகக் கூறப்படும் சலுகைகள் குறித்த விபரங்கள் கோரப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டச் செயலாளர் ஃபர்மான் காசிம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இது தொடர்பில் விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம்
ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பொறுப்பதிகாரி நிசாம் ஜமால்டீன் அனுப்பியதாகக் கூறப்படும் கடிதத்திற்கு அமையவே தமது கட்சி இந்த விண்ணப்பத்தை அனுப்பியுள்ளதாக வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளருமான ரெஹான் ஜயவிகம (Rehan Jayawickama) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தின் பதிலுக்காக தாம் காத்திருப்பதாக ஜெயவிக்ரம தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
