இலங்கையில் தலைசுற்ற வைக்கும் ஆப்பிள் பழத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்
இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் அனைத்து வகையான பழங்களின் விலைகளும் உயர்ந்துள்ளது.
அதன்படி நாட்டிலுள்ள பொருளாதார மையங்களில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களின் விலையை அதிகரித்துக் காணப்படுகின்றன. அந்தவகையில், கடந்த 2022ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாகங்களில் 100 கிராம் ஆப்பிள் பழத்தின் விலை 75 ரூபா தொடக்கம் 100 ரூபாவாக இருந்தது.
தற்போது 100 கிராம் ஆப்பிள் பழத்தின் விலை 350 ரூபாவாக உள்ளது. அதாவது 1 கிலோ ஆப்பிள் பழத்தின் விலை 1350 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் பழச் சந்தையில் பப்பாசிபழம் ஒரு கிலோ 3830 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை ஒரு கிலோ 1,572 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
விலை உயர்வால் குறைந்த விற்பனை
மேலும், ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் 250 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிராம் தோடம்பழத்தின் விலை 817 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பச்சை ஆப்பிள் பழத்தின் விலை 836 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ உள்ளூர் இனிப்பு தோடம் பழத்தின் விலை 600 ரூபா, ஒரு கிலோ நாட்டு மாம்பழத்தின் விலை 700 தொடக்கம் 750 ரூபாவாகவும், ஒரு கிலோ கொய்யாவின் விலை 750 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பழங்களின் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பழங்கள் தொடர்பில் மருத்துவர்களின் கூற்று
பழங்கள் என்று கூறும்போது மிகக் குறைந்த அளவிலான கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் கொண்டுள்ளது.
இந்த பழங்களை உண்பதால் நமக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்கள், உடல் பருமன் பிரச்சினை மற்றும் செரிமானக் குறைபாடுகள், மலச்சிக்கல் போன்ற உபாதைகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என மருத்துவம் கூறுகின்றது.
அத்துடன் தற்போது காணப்படுகின்ற மிகவும் வெப்பமான காலப்பபுதியில் வெப்பத்தைத் தணிக்கத் தர்ப்பூசணி, ஆரஞ்சு போன்ற பல்வேறு வகையான பழங்களின் சாறுகளைப் பிழிந்து உட்கொள்வது உடலுக்கு நன்மையைப் பயக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு தினமும்பழவகைகளைச் உட்கொண்டு வருவதே சிறந்தது என்றும் பலம் தரும் பழங்களை நம் வாழ்க்கையோடு இணைத்துக் கொள்வோம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
தற்போது பழங்களின் விலைகள் எகிறி வருவதால் அதனை மக்கள் வாங்கி உட்கொள்வதற்குத் தயக்கம் காட்டி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
