ஜனாதிபதிக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது இந்திய விஜயத்தின் போது கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினர் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ், ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது தங்களுக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதி
மேலும், இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முதல் பயணமாக எதிர்வரும் வாரம் இந்தியா செல்ல உள்ளதாக அறிகிறோம் எனவும் கூறியள்ளார்.

இதன்படி, இந்திய இழுவமடி படகுகளினால் எமது கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகி வருவதை இலங்கை ஜனாதிபதியும் கடற்றொழில் அமைச்சரும் நன்கு அறிவார்கள் என்றும் சுட்க்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam