மஸ்கெலியாவில் குடியிருப்பில் தீ விபத்து (Photos)
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுண்ஸ்வீக் தோட்டம் புளும்பீல்ட் பிரிவில் தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 வீடுகள் கொண்ட குடியிருப்புகளில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தின் போது வீட்டில் யாரும் இல்லையெனவும், அயலவர்கள் கூச்சலிட்டதையடுத்து, ஏனையவர்கள் ஓடி வந்து மற்றைய வீட்டிற்குத் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் எனப் பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதேவேளை இது தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேச வாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களைக் கண்டறிய மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, தோட்ட நிர்வாகம் இவர்களுக்குத் தேவையான உதவிகளைச்
செய்து வருகின்றது.




எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri