முன் அறிவிப்பின்றி எந்தவொரு பகுதியும் முடக்கப்படும் - இராணுவ தளபதி அறிவிப்பு
நாட்டில் எந்தவொரு பகுதியிலும் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் முன்னறிவிப்பின்றி அந்த பகுதி முடக்கப்படும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பிரதேசம், பொலிஸ் பிரிவு, கிராம சேவகர் பிரிவு போன்றவைகள் உடனடியாக முடக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான நிலைகளுக்கு முகம் கொடுப்பதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் முடக்கப்படுவது தொடர்பில் முன்கூடிய மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் இம்முறை அவ்வாறு முன்னறிவிப்பு விடுக்காமல் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். எனினும் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த சில தினங்களான நாளாந்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri