அனுஷ பெல்பிட்டவின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவிற்கு விளக்கமறியல் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் விளக்கமறியலில்
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சந்தேகநபர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான அனுஷ பெல்பிட்ட, தனக்குச் சொந்தமான 4 கோடியே 60 இலட்சம் ரூபா பணத்தை எவ்வாறு ஈட்டினார் என்பதை வெளிப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார்.
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் கயல் சீரியலுக்காக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam