அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம்: மன்னார் பெண்கள் பிரதமருக்கு கடிதம்
அனுராதபுரத்தில் பெண் வைத்தியருக்கு நடைபெற்ற பாலியல் சீண்டலை கண்டித்தும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் மன்னார் பெண்கள் வலை அமைப்பினால் இன்று (15) பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு (Harini Amarasuriya) கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, மதிப்பிற்குரிய இலங்கை வாழ் குடிமக்களுக்கும், ஊடகத்துறையில் கூடியிருக்கும் பெண்கள். ஆண்களுக்கும் மற்றும் பிரதமர் அவர்களுக்கும், இன்று நாங்கள் அனைவரும் துயரமான இதயங்களுடன் உங்கள் முன், இலங்கை முழுவதையும் உலுக்கிய சம்பவம் தொடர்பாக எடுத்துரைப்பதற்கு ஒன்று கூடியுள்ளோம்.
அனுராதபுரத்தில் பணியாற்றும் பெண் வைத்தியருக்கு, இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவச்சிப்பாயால் கத்தி முனையில் இழைக்கப்பட்ட உடல்ரீதியான சீண்டல் என்பது, ஒரு தனிமனிதன் மீதான வன்முறையல்ல, மாறாக இது இலங்கையில் வாழுகின்ற ஒட்டு மொத்தப்பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு, நம்பிக்கை மீது இழைக்கப்பட்ட குற்றச்செயலாகும்.
சட்டநடைமுறைகள்
இந்தக்கொடுரமான வன்செயல் பெண்கள் நலிந்த நிலையில் உள்ளார்கள் என்பதை எழுத்துரைக்கின்றது. அத்துடன் இது சாதாரண பெண்களுக்கு மட்டுமல்ல, தங்களது வாழ்க்கையை ஏனையவர்களின் உயிர்களைக்காப்பாற்ற தங்களை அர்ப்பணித்த வைத்தியமாது மீதும் நடந்தேறியுள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே பெண்களாகிய நாங்கள் வலிமையான மற்றும் உடனடியான மேன்முறையீட்டை தங்களுக்கு முன்வைக்கின்றோம். இந்தப் பாரதூரமான குற்றச்செயலைப் புரிந்த கொடும்பாவி சட்டத்தின்கீழ் மிகவும் கொடுரமான முறையிலும், தண்டிக்கப்படவேண்டும்.
இந்தச்சம்பவத்திற்கான நீதி உடனடியாகவும். கடுமையாகவும் எவ்வித காலதாமதமின்றியும், எதுவித இணக்கப்பாடுகளுமின்றியும் வழங்கப்படவேண்டும். இது ஒரு சம்பவம் தொடர்பானதல்ல. மாறாக இதன் முலம் ஒரு தெளிவான கருத்து முன்வைக்கப்படவேண்டும்.
அதாவது இலங்கையில் இவ்விதமான பாரதூரமான செயல்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் எவ்விதத்திலும் பொறுத்துக் கொள்ளப்படமாட்டாது. என்பதாகும். பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் நீதி முதன்மைப்படுத்தப்படவேண்டும். சட்டநடைமுறைகள் மீள் ஒழுங்கு படுத்தப்படவேண்டும்.
இதில் ஆறாத்துயரமாக அமைவது மார்ச் மாதம் உலகளாவிய ரீதியில் அனைத்துப் பெண்களையும் மேன்மைப்படுத்தவும் பாராட்டவும் அவர்களது சேவைகளுக்காக நன்றியைச் செலுத்தவும் என்பதுடன், மார்ச் மாதம் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுஸ்டிக்கப்பட்டும் வருகின்றது.
சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்பட்டு இருதினங்கள் கடந்த நிலையில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடைபெற்றது மிகுந்த வேதனையளிக்கின்றது. மேலும் இந்நிகழ்வு மார்ச் மாதத்தின் கொண்டாட்டங்களில் ஒரு காரிருளைப் படரச்செய்துள்ளது.
மேலதிக விசாரணை
நாடளாவிய ரீதியில் பெண்களின் மனதில் கடும்கோபத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் சொல்லப்போனால் பெண்கள் மார்ச் மாதத்தில் மட்டுமல்ல மாறாக அவர்களது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் மதிக்கப்படவும் கொண்டாடப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டியவர்கள் இந்த துயரகரமான சம்பவம்.
பெண்களாகிய நாங்கள், சம உரிமைக்காகவும் நீதிக்காகவும் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதென்பதை உணர்த்துகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயம், இந்தச் குற்றச்செயலில் ஈடுபட்டநபர் இராணுவத்திலிருந்து தப்பியோடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமகாலங்களில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களை உற்று நோக்குகின்றபோது காணக்கூடியது யாதெனில் இவ்வாறாக இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்கள் சமுகங்களில் இழைக்கப்படுகின்ற குற்றச்செயல்களில் பெரும்பங்கினை வகிக்கின்றனர்.
இந்த இழிவான செயல்கள் ஆயுதம் தாங்கி பாதுகாப்பில் ஈடுபடுகின்றவர்களின் பொறுப்புடைமையையும் ஒழுக்கத்தையும் கேள்விக்குறியாக்குகின்றது.
இந்நிலையில் அப்பாதுகாப்புத்துறையில் பணிபுரியும் தனிநபர்கள் இவ்வாறான கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடும்போது இலங்கையில் வாழ்கின்ற மக்கள் எவ்வாறு பாதுகாப்புத்துறையின் மீது நம்பிக்கை கொள்ளமுடியும்.
இலங்கை அரசாங்கம் இந்தத் தப்பியோடிய இராணுத்தினர் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் இவ்வாறான குற்றச்செயல்கள் நடைபெறுவதை முற்றாகத் தவிர்க்கவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
