அரசு பதவி விலகும் வரை நாங்கள் ஓயவேமாட்டோம்! அநுரகுமார சூளுரை
"அராஜக ஆட்சி நடத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும். அதுவரை நாம் ஓயப்போவதில்லை. எமது ஆட்டம் தொடரும் என தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. சூளுரைத்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ரணில்
"மக்களால் வீடு செல்லுமாறு வலியுறுத்தப்படுபவர் தான் கோட்டாபய. மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர் தான் ரணில். இவர்கள் இருவராலும் நாட்டை ஆள முடியாது.

மக்களுக்கு நல்லதைச் செய்ய முடியாது. சர்வதேசம் எமது நாட்டுக்கு உதவும். ஆனால், எம்மைத் தூக்கிவிடாது. நாம் தான் எழ வேண்டும். அதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்க தேசிய மக்கள் சக்தி தயார்.தேர்தல் நடத்தப்படும் வரை இடைக்கால அரசைப் பொறுப்பேற்கவும் நாம் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam