ஒரு டிக்கெட்டால் மேடையில் வைத்து பறிபோன அனுரவின் மரியாதை
"மே தினத்தை நடத்த பிச்சை எடுப்பவர்கள் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? கட்சி நிதியில் உள்ள 900 கோடி ரூபாய் இப்போது எங்கே" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், அனுரகுமாரவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மே தின பேரணி
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி கொழும்பு, செத்தம் வீதியில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேடையில் வைத்து தேசிய மக்கள் சக்தி விற்பனை செய்ததாக கூறப்படும் டிக்கெட்டையும் அவர் காட்டியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் “தேசிய மக்கள் சக்தியானது மே தினச் செலவை அப்பாவித் தொழிலாளர் மீது சுமத்தியுள்ளது.
நிதி திரட்டல்
இந்த டிக்கெட் எனக்கு அலவ்வ சென்ட்ரல் ஆசிரியர் ஒருவரே கொடுத்தார். தற்பெருமை பேசும் அனுர திஸாநாயக்கவின் சக்தி இது.
எனது கையில் இருக்கும் இந்த டிக்கெட், மே தினத்தை கொண்டாடுவதற்காக ஒவ்வொரு கிராமத்தின் தொழிலாளர்களிடம் விற்கப்பட்டு நிதி திரட்டப்பட்டுள்ளது.
மே தினத்தை நடத்த இப்படி பிச்சை எடுப்பவர்கள் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? கட்சி நிதியில் உள்ள 900 கோடி ரூபாய் இப்போது எங்கே"? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
