அனுரகுமார இந்தியாவிற்கு திடீர் விஜயம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
அனுரகுமார உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்றைய தினம் இந்தியாவிற்கு பயணம் செய்ய உள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெறுவதாக கட்சி அறிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அனில் ஜயந்த ஆகியோர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் இந்த விஜயத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அழைப்பின் அடிப்படையில் இந்த விஜயம் இடம்பெறுவதாக கூறப்பட்ட போதிலும் என்ன விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது என்பது பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா



