புதையல் தோண்ட முற்பட்ட சம்பவம்! பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு
அநுராதபுரம் பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அநுராதபுரம் அருகே ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகிலுள்ள காணியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உள்ளிட்ட ஒன்பது சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த பெண் கொழும்பு பிரதேசத்தில் கடமையாற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரின் மனைவி என்பது விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
ஒன்பது சந்தேகநபர்கள்
தன் மனைவியை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் கணவரான பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அநுராதபுரம் நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் நேற்று(08) மேற்குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பது சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களை எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் நாலக்க சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
