கால்வாயில் கவிழ்ந்த டிரக்டர்! 26 வயது இளைஞர் உயிரிழப்பு..
அனுராதபுரம், ஹரிகஸ்வெவ - கலங்குட்டிய கால்வாய் அருகே இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கலங்குட்டிய கால்வாய் வீதியில் நேற்று முன்தினம் பயணித்துக்கொண்டிருந்த உழவு இயந்திரம், எதிர்பாராத விதமாக வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் உழவு இயந்திரத்தை செலுத்திய ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹரிகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.