ஜனாதிபதியின் மூளைச்சலவையிலேயே அனுரகுமார இந்தியா விஜயம்: அரச தரப்பினர் ஆருடம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய மக்கள் சக்தியை மூளைச்சலவை செய்துள்ளார், அதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்திய தலைவர்களை சந்திக்க சென்றுள்ளார் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஆதிக்கம் குறித்து உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இதன் காரணமாகவே இந்தியா சென்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மூளைச்சலவை
அவர் மேலும் தெரிவிக்கையில்,, பழைய ஆடைகளை அணிந்தவர்கள் கோட் அணிகின்றனர். இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.
இது ரணில் விக்ரமசிங்க மூளைச்சலவை செய்ததால் ஏற்பட்ட மாற்றம் எனவும் அர் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்துடன் இணைந்து செயற்படுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் எவ்வாறு அரசாங்கத்தை விமர்சித்தார்கள் என்பது எங்களிற்கு தெரியும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
உயர்ஸ்தானிகருக்கு ஆலோசனை
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் இந்தியாவுக்குச் சென்றுள்ளார் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் வழங்குமாறு இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்.
மக்கள் விடுதலை முன்னணியினர் இந்திய எதிர்ப்பு கொள்கையிலிருந்து விடுபட்டு நடைமுறைக்கு ஏற்றால் போல் செயற்பட முனைவது வரவேற்கத்தக்கது. மக்கள் விடுதலை முன்னணியின் மாற்றம் மகிழ்வுக்குரியது என விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |