யாழில் திடீரென மாயமான சோதனைச்சாவடிகள்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நேற்று (17) வடக்கு மாகாணத்திற்கு பிரசாரத்திற்கு வருகை தந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்த சோதனைச்சாவடிகள் மாயமாகியுள்ளன.
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாழ் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியும் பூநகரி வீதியில் சங்குப்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியுமே இவ்வாறு திடீரென அகற்றப்பட்டது.
அத்தோடு, அங்கு எவரும் கடமையில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சோதனைச் சாவடிகள்
மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.
இதற்காக ஏ9 வீதி மற்றும் பூநகரி வீதிகள் ஊடாக ஜனாதிபதி பயணம் மேற்கொண்டார்.
ஜனாதிபதி வரும்போது மட்டும் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டமை மூலம் அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறதா அரசாங்கம் பொலிஸாரால் ஏமாற்றப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து சில மாதங்களுக்கு முன்னரும் குறித்த சோதனைச்சாவடிகள் தளர்த்தப்பட்டு சிறிது காலங்களுக்கு பின்னர் மீண்டும் அமைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
