1500ஐ நெருங்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் 1490 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த முறைப்பாடுகள் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை பதிவாகியுள்ளன.
இந்த முறைப்பாடுகளில் வன்முறை தொடர்பில் 9 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறியமை தொடர்பில் 1388 முறைப்பாடுகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை
இதுவரையில் கிடைக்கப்பெற்ற 1490 முறைப்பாடுகளில் 1319 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான அஞ்சல் வாக்களிப்பு தினங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அஞ்சல் வாக்களிப்பு
இதன்படி இந்த அஞ்சல் வாக்களிப்புகள் இம்மாதம் 24ஆம், 25ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதேநேரம் வேட்பு மனு தொடர்பாக நீதிமன்றம் உத்தரவுகளை வழங்கியுள்ள 102 உள்ளூராட்சி மன்றங்களது வாக்குச் சீட்டுகள் மீண்டும் அச்சிடப்படுவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
