அநுரவின் கிராமத்திற்கு நாமல் சென்ற போது காத்திருந்த அதிர்ச்சி..!
ஜனாதிபதி அநுரவின் கிராமமான தம்புத்தேகம நகரில் நாமல் ராஜபக்ச ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் மதுபோதையில் கட்சி உறுப்பினர்கள் சுற்றித் திரிந்ததால் பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதாக தகவல் வெளியாகியிருந்தது.
வீதியில் மதுபோதையில் சிலர் விழுந்து கிடப்பதையும் மக்கள் அவதானித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த வருடம் நவம்பரில் நுகேகொடை மற்றும் நேற்று (17.01.2026) தம்புத்தேகமவில் நடைபெற்ற பேரணியில் அதிக அளவில் மதுபானம் விநியோகிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
அந்தக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் குடிபோதையில் கைவிடப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
உணவுக்கும், மதுபானங்களுக்கு பின்னால் செல்லும் மக்களிடத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது இன்றைய நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...