ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஒப்பந்தங்களில் கையெழுந்திடும் அநுர
ஜப்பானுக்கான தனது அடுத்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மொத்தம் 963 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் ரூ. 1.94 பில்லியன்) மானியத்தை பெறுவதற்காக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார்.
இந்த தொகுப்பில் இலங்கையின் பால் உற்பத்தி துறைக்கு 463 மில்லியன் யென் மற்றும் இலங்கை கடற்படையை வலுப்படுத்த 500 மில்லியன் யென் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பால் உற்பத்திக்கான நவீன உபகரணங்களையும், கடற்படைக்கு கண்காணிப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்களையும் ஜப்பான் வழங்கவுள்ளது.
அதிகாரப்பூர்வ ஆவணங்கள்
இதற்காக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திடவுள்ளார்.
ஜனாதிபதி எதிர்வரும் 26ஆம் திகதி ஜப்பானுக்குப் புறப்படவுள்ளதுடன், 27ஆம் திகதி வேல்ட் எக்ஸ்போ கண்காட்சியில் கலந்துகொள்வதுடன், சிரேஷ்ட ஜப்பானியத் தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
