தொலைபேசி தரவுகளால் சிக்கப்போகும் முக்கிய தலைகள்..! கெஹெல்பத்தர பத்மே விவகாரத்தில் அநுர அதிரடி
கெஹெல்பத்தர பத்மே கைது செய்யப்பட்ட பின்னர் மீட்கப்பட்ட அவரது தொலைபேசியில் இருந்து ஏராளமான தரவுகள் அழிக்கப்பட்டிருந்த நிலையில், சிஐடியினர் அவற்றைப் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும், அதில் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தொடர்புடைய தரவுகள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உதவியதாகக் கூறப்படும் சுரேஷ் சலே மீண்டும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அவரது மனைவி மற்றும் சில முக்கிய தலைவர்கள் கோயில்கள் மற்றும் பௌத்த நிகழ்வுகளில் அதிகளவில் கலந்துகொள்வதை அவதானிக்க முடிகிறது.
இதேவேளை, பல்வேறு விடயங்களை அநுர அரசாங்கம் அம்பலப்படுத்தி வருவதுடன், ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வரும் நிலையில், ஹேமரத்ன தேரரின் அறையில் இருந்து பெண்ணொருவரின் தலைமுடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்கள் தொடர்பிலும், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலும் அநுர அரசாங்கம் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இவ்வாறான பல பரபரப்பான விடயங்களை தொடர்ந்து காணொளியில் காணலாம்.
ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு - அடுத்த மாதம் இடைத்தேர்தல்
ஹக்கீம் - நிசாம் காரியப்பருக்கு பகிரங்க எச்சரிக்கை..! அரசியல் சூட்சுமங்களை அம்பலப்படுத்திய சிறிநேசன்