மோடியின் கைப்பாவையாக அநுர செயற்படுகின்றார் – குமார் குணரட்னம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வழியில் நாட்டின் பொருளாதாரத்தை அநுர வழி நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
செல்வந்த திருட்டு கும்பல்களுடன் அநுரவும் இணைந்து செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய மற்றும் உலக அரசியலில் இலங்கையை இந்தியாவின் காலணியாக மாற்றுவதற்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்குகின்றார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தியாவின் வியாபிப்பு கொள்கைக்கு உதவுவதாகவும், இந்தியாவின் காலணித்துவ நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா எம்மை சீனாவிடமிருந்து பிரிக்க முயற்சிப்பதாகவும், சீனாவும் எமது நேச நாடு அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவே எம்மை ஐ.எம். எப் கடன் பொறியில் சிக்க வைத்தது துறைமுக நகரம் மற்றும் அம்பந்தொட்டை துறைமுகம் என்பனவற்றை சீனா, அபகரித்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் கடன் சுமை என்பனவற்றை பயன்படுத்தி பெரிய அண்ணாவான மோடி கைப்பவை தம்பியான அநுரவை அடி பணியச் செய்துள்ளதாக குமார் குணரட்னம் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் உதவிகளை வழங்கும் போர்வையில் இலங்கையின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றார் எனவும் இது ஓர் பாரதூரமான நிலைமையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடியதும், நாட்டை அடிமைப்படுத்தக் கூடியதுமான ஒப்பந்தங்களை இந்தியா கைச்சாத்திடுவதாகவும் இதனால் நாட்டுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே முற்போக்கு சக்திகள் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

உலகின் எதிர்காலமே இதுதானாம்! தங்கத்தை விட முக்கியம்..நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல் News Lankasri
