வரிகளைச் சுமத்திவிட்டு அநுர பொய்ப் பிரசாரம்: சாகர காரியவசம் குற்றச்சாட்டு
எந்தவொரு நாட்டுத் தலைவரும் வரி செலுத்தாத வகையில், தற்போதைய நாட்டுத் தலைவர் மக்கள் மீது வரிகளைச் சுமத்திவிட்டுப் பெருமிதம் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று(02.11.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஜனாதிபதியின் மனநிலை குறித்துப் பாரிய கேள்வி எழுந்துள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
அரசமைப்பின்படி ஜனாதிபதி ஒருவர் மனநலக் குறைபாடு அல்லது சுயநினைவின்றிச் செயற்படும்போது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முடியும்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் புதிய வரிகள் எதையும் அறிமுகப்படுத்தவில்லை என்றும், ஏற்கனவே இருந்த வரிகளையே தொடர்வதாகவும் கூறியுள்ளார்.
நாட்டின் நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி இவ்வாறானதொரு பொய்யான பிரசாரத்தை முன்னெடுப்பது தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
எரிபொருள் விலை உயர்வு
யுத்தத்தைக் காரணம் காட்டி பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாத ஆட்சியாளர்கள் எதற்கு என முன்னதாகக் கேட்ட ஜனாதிபதியின் வார்த்தைகளே இன்று அவரையே திரும்பித் தாக்கியுள்ளன.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன இந்த அரசின் தோல்வியையே காட்டுகின்றன.
இன்று நாட்டில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து பொலிஸ் நிலையங்களில் இளைஞர்கள் உயிரிழக்கின்றனர். நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த அரசு முயன்றாலும், ஜனநாயகத்தை நேசிக்கும் மக்கள் இந்த அடக்குமுறைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan