அநுர வந்த ஜெட் விமானம்: நாடாளுமன்றில் விளக்கமளித்த விஜித ஹேரத்
2025 மே 6 ஆம் திகதியன்று தனியார் ஜெட் விமானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கை திரும்பியது இன்று (8) நாடாளுமன்றத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் இந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயணத்திற்கு யார் நிதியளித்தார்கள் என்பது குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
வியட்நாம் அரசாங்கம்
வியட்நாம் அரசாங்கம் இந்த செலவை ஏற்றுக்கொண்டதா என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்திடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர்,வியட்நாம் அரசாங்கம் அல்ல, ஐக்கிய நாடுகளுடன் இணைந்த வியட்நாம் பௌத்த சங்கமே இந்த பயணத்துக்கு நிதியளித்தது என்று அமைச்சர் ஹேரத் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க இலங்கைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தைக் காரணம் காட்டி, ஜனாதிபதி ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகளின் வெசாக் விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள மறுத்து விட்டார்.
பொது நிதி
இருப்பினும், பௌத்த சங்கத்தால், நாடு திரும்புவதற்கான பயண ஏற்பாடுகள் வழங்கப்பட்ட பின்னரே, அவர் நிகழ்வில் பங்கேற்க இணக்கம் வெளியிட்டார் என்று விஜித ஹேரத் தெரிவித்தார்.
எனவே இந்தப் பயணத்தில் இலங்கையின் பொது நிதி எதுவும் செலவிடப்படவில்லை என்று அமைச்சர் ஹேரத் நாடாளுமன்றத்திற்கு உறுதியளித்தார்.
ஜனாதிபதி அநுர நடுத்தர விமானமான எம்ப்ரேயர் லெகசி 600 ஜெட் விமானத்தில் கொழும்புக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
