வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஒரு பில்லியன் ரூபாய்களை செலவிட்ட ரணில் விக்கிரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wicramesinghe) 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் 1.27 பில்லியன் ரூபாய்களை செலவிட்டதாக அரசாங்கத்தின் தலைமை அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 இல் 4 வெளிநாட்டு பயணங்களையும், 2023 இல் 14 வெளிநாட்டு பயணங்களையும், 2024 இல் 5 வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொண்டார்.
வெளிநாட்டுப் பயணம்
2022 இல் அவருடன் 63 அரச அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்றதாகவும், 2023 இல் மொத்தம் 252 அரச அதிகாரிகள், அவரின் பயணத்தில் பங்கேற்றதாகவும், 2024 இல் அவரின் சுற்றுப்பயணங்களுக்காக 111 அரச அதிகாரிகள் பங்கேற்றதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளாத, ஆனால் அரச அதிகாரிகள் மாத்திரம் பங்கேற்ற, 19 வெளிநாட்டு பயணங்களுக்காக, மொத்தம் 19.8 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்! சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுட உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
