சமீபத்திய கொலைகள் மற்றும் பாதாள உலகம் குறித்து காரசாரமாக பேசிய அநுர
அரசியல் தலைவர்கள், சட்ட அதிகாரிகள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பொலிசார் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்தோர் பாதாள உலகக் குழுவினரை ஆதரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(28.02.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த காலத்தின் அனைத்து அரசாங்கங்களும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தன.
முறையான நடவடிக்கைகள்
எனினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதனை ஒரு முடிவுக்கு கொண்டு வரும். கிட்டத்தட்ட 73 T-56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களுக்கு கைமாற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சமீபத்திய கொலைகளில் 6 வெவ்வேறு பாதாள உலகக் குழுக்கள் ஈடுபட்டுள்ளது. அவை தொடர்பாக முறையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |